கிழக்கு மாகாணத்தில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது
கிழக்கு மாகாணத்தில் கோவிட் - 19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 55ஆயிரத்தையும் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் கடந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
செப்டெம்பர் மாதத்தின் இறுதி பகுதியில் கிழக்கில் ஆயிரம் புதிய கோவிட் தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ள நிலையில், ஒக்டோபர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 800 தொடக்கம் 600 ஆக குறைந்து காணப்பட்டது.
ஆனால் ஒக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் 700 கோவிட் தொற்றாளர்களாக அதிகரித்து காணப்பட்டது. அம்பாறை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் ஏனைய சில பகுதிகளிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவதை காணகூடியதாக இருந்தாலும், அது கடந்த மாத இறுதிப்பகுதியில் சற்று அதிகரித்து காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
கிழக்கு மாகாணத்தில் கோவிட் தடுப்பு மருந்து வழங்கும் செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், முதலாவது தடுப்பூசி 20 வயதுக்கு மேற்பட்டோரில் 93 சதவீத மாணவர்களுக்கும், இரண்டாம் கட்ட தடுப்பூசி 82 சத வீதமாணவர்களுக்கும், 16 தொடக்கம் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு 93 சத வீதம் பேருக்கும் பைசர் கோவிட் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் முன்னிலை உத்தியோகத்தர்களுக்கான மூன்றாவது பூஸ்டர் பைசர் தடுப்பு மருந்து வழங்கும் செயற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. நாட்டினுடைய பொருளாதார நிலை எமது அன்றாட நடவடிக்கையில் பல தளர்வுகள் ஏற்படுத்தியுள்ளது.
அதனை நாம் சாதாரண நிலை என கருத்தில் கொண்டு கோவிட் தொற்று எம்மை விட்டு நிரந்தரமாக நீங்கி விட்டது என நினைத்துக்கொண்டு எமது அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்வது மேலும் ஒரு புதிய கோவிட் கொத்தணியொன்றினை உருவாக்கும் அச்சம் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளது.
புதிய வகையான கோவிட் வைரஸ் ஆதிக்கத்தினால் இது பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் கட்டுப்பாடுகள் பூரணமாக கடைபிடிக்கப்படுவதிலிருந்து ஓரளவு நாம் மீள கூடியதாக இருக்கும். இதனால் எமது தேவையற்ற ஒன்றுகூடல்களை இயன்ற வரை தவிர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் உள்ளோம்.
விசேடமாக திருமண வைபவங்கள், மரண சடங்குகள், சமய வழிபாடுகள் மற்றும் குடும்ப ஒன்றுகூடல்கள் சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களிற்கு அமைவாக நடந்து கொள்ள வேண்டும். முகக்கவசங்களை சரிவர அணிவதும், சமூக இடைவெளியை முறையாக பேணுவதும் கட்டாயமாகும்.
இவ்வாறான செயற்பாடுகள் எல்லை மீறும்போது நோயாளிகளின்
எண்ணிக்கையும், மரணங்களின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரிக்க வாய்ப்புண்டு.
அத்துடன் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படலாம் என
தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
