நுகேகொடை போராட்டம் ஆட்சிக் கவிழ்ப்புக்கான பேரணியா..! சரத் வீரசேகர விளக்கம்
எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணியானது ஆட்சிக் கவிழ்ப்புக்குரிய போராட்டம் அல்ல என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள எதிரணியின் பேரணி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நவம்பர் 21 ஆம் திகதி பேரணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும். இது ஆட்சிக் கவிழ்ப்புக்குரிய போராட்டம் அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
அரசுக்கு அழுத்தம்
ஏனெனில், அடுத்த தேர்தலின் போது, நாட்டு மக்கள் நிச்சயம் இந்த ஆட்சியைக் கவிழ்ப்பார்கள். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசுக்கு அழுத்தம் கொடுப்பதே பேரணியின் பிரதான நோக்கம்.

போதை ஒழிப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது. எனினும், போதை ஒழிப்பு என்ற போர்வையில் மக்களுக்கு வழங்கும் வாக்குறுதியை மறந்து செயற்படுவது ஏற்புடையது அல்ல” எனக் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 6 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri