இந்தியாவிற்கு அணு ஆயுத எச்சரிக்கை: வலுக்கும் மோதல்
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதுவர் முகமது காலித் ஜமாலி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவும் நிலையில், அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.
அணு ஆயுதங்கள்
அத்துடன், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ஊடகங்கள் முன்வைக்கும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விவாதிக்க விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், இந்தியா முதலில் தாக்குதல் நடத்தினால், வழக்கமான ஆயுதங்கள் முதல் அணு ஆயுதம் வரை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவோம் என அவர் எச்சரித்துள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி, இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த போவதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |