போருக்கு மத்தியில் ஆரம்பமான அணுசக்தி உச்சிமாநாடு
ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதாகவும் அது உலகத்திற்கு ஆபத்து என்று கூறியே அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக போரை ஆரம்பத்துள்ள நிலையில் இரண்டாவது அணுசக்தி உச்சிமாநாடு 2026 பாரிஸில் நேற்று (10.03.2026) ஆரம்பமானது.
முதலாவது அணுசக்தி உச்சிமாநாடு 2024 மார்ச் 21 ஆம் திகதி பிரசல்ஸில் நடைபெற்றது.
மாநாட்டின் நோக்கம்
மாநாட்டில் சுத்தமான எரிசக்தி எதிர்காலத்தை நோக்கிய மாற்றத்திற்கு அணுசக்தி எவ்வாறு ஆதரவளிக்க முடியும்.
அதன் சாத்தியப்பாடுகளை ஆராய்வதற்காக அரசாங்கங்கள், சர்வதேச அமைப்புகள், நிதி நிறுவனங்கள், தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப சமூகங்களின் தலைவர்களை இது ஒன்றிணைக்கிறது.
Today the Nuclear Energy Summit #NES2026 took place in France.
— IAEA - International Atomic Energy Agency ⚛️ (@iaeaorg) March 10, 2026
Watch for some of the key highlights. pic.twitter.com/DHvdsgIB6E
அணுசக்தி தொழில்நுட்பம், பாதுகாப்பு, நிதி, புத்தாக்கம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றின் சமீபத்திய முன்னேற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில், தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்குவதன் மூலமும், குழு மற்றும் வட்டமேசை விவாதங்கள் நடைபெறவுள்ளன.



கார் பயணத்தை தியாகம் செய்தால் 500 சுவிஸ் ஃப்ராங்குகள்: சுவிட்சர்லாந்தில் ஒரு சோதனை முயற்சி News Lankasri