ஞானசாரரின் தீர்ப்பு மதங்களை இழிவுபடுத்தும் சகலருக்கும் படிப்பினை: முஸ்லிம் தரப்புக்கள் பாராட்டு
இஸ்லாத்தை அவமதித்துப் பேசிய குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டதன் மூலம் நாட்டின் நீதித்துறை பாராட்டும்படியாக உள்ளது என புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது பற்றி புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் முஸம்மில் அபூசாலி தெரிவித்திருப்பதாவது,
”முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலத்திலும் ஞானசார தேரர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
ஆனாலும் அவர் மைத்திரியினால் மன்னிப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
நீதிமன்ற தீர்ப்பு
அது போன்று தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்படமாட்டார் என நம்புகிறோம். ஞானசார தேரருக்கான தீர்ப்பு மதங்களை மோசமாக நிந்தனை செய்யும் சகலருக்கும் படிப்பினையாகும்.
இதனை ஒரு படிப்பினையாக கொண்டு மதங்களுக்கிடையில் அன்பையும், சகிப்புத்தன்மையையும் உண்டாக்க சகல மத தலைவர்களும் முன் வருவதுடன் அத்தகைய செயற்றிட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |