நாட்டில் தற்பொழுது தேர்தல் நடந்தால் அரசாங்கம் 3ம் இடத்தையே பிடிக்கும்
நாட்டில் நிலவி வரும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டால், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசு மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும் என முன்னாள் அமைச்சர் டி.வி. சாணக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் இலங்கை பொதுஜன பெரமுனாவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரில், தற்போது அதிகமான மக்கள் ஆதரவு உருவாகியுள்ளது நாமல் ராஜபக்சவுக்கே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், எதிர்க்கட்சிக்குள் மோதலை உருவாக்குவதோ அல்லது போட்டியை ஏற்படுத்துவதோ தங்களது குழுவின் நோக்கம் அல்ல என அவர் தெரிவித்தார்.

முதலாவது, இந்த அரசு எந்த வகையிலும் தேர்தலுக்கு செல்லாது. ஏனெனில் தேர்தல் நடைபெற்றால் இந்த அரசு மூன்றாம் இடத்துக்கு செல்லும் என்பது உறுதி என குறிப்பிட்டுள்ளார்.
அதனால் தான் அவர்கள் தேர்தலை தவிர்க்கின்றனர் எனவும் ஆனால் தேர்தல் நடந்தால், குறிப்பாக மாகாண சபை தேர்தலை நடத்தினால், அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
பொதுஜன முன்னணியும், கூட்டணி கட்சிகளும் எங்களுடன் இணைந்து அந்த தேர்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளன டி.வி சாணகக் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 19 மணி நேரம் முன்
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri