வடக்கு- கிழக்கிலுள்ள கைவிடப்பட்ட தொழிற்சாலைகளை கையிலெடுத்த அநுர அரசாங்கம்
யுத்தம் நிறைவுபெற்று 15வருடங்களாக வடகிழக்கில் தொழிற்சாலைகள் கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே அவற்றினை கவனத்தில் கொண்டு மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீள இயங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(2) நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சிசபை
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“கடந்த காலத்தில் வீதிகளை மாத்திரம் அபிவிருத்தி என்ற போர்வையில் அமைத்தவர்கள் அதன்மூலம் தரகுப்பணத்தைப்பெற்றுக்கொண்டிருந்தார்கள்.
அந்த தரகுப்பணத்தினை,இலஞ்சத்தினைப்பெற்றவர்கள் இன்று சிறைவாசம் அனுபவிக்கும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் சட்டம் தனது கடமையினை சரியாக செய்யும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வளவு காலமும் உள்ளுராட்சிசபைகளை ஆட்சிசெய்தவர்கள் சபைகளில் ஊழல்மோசடிகளை மேற்கொண்டிருந்தார்கள்,நிதிகளை தவறான முறையில் பயன்படுத்தி வீணடித்துள்ளார்கள்.
இதன் காரணமாகவே கிராமங்கள்,பிரதேங்கள் சரியான முறையில் வளர்ச்சியடையாத நிலைமைகள் காணப்படுகின்றன.
நாடாளுமன்ற கூட்டத்தொடர்
அதேபோன்று கடந்தகாலத்தில் பேசுபொருளாகயிருந்தது பட்டலந்த வதைமுகாம், ஐதேக ஆட்சிக்காலத்தில் கிளர்ச்சியில் ஈடுபட்ட எமது கட்சியின் தோழர்கள் வதைமுகாம்களுக்கு கடத்திச்செல்லப்பட்டு அந்த வதைமுகாம்களில் சித்திரவதை செய்து அவர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டதாக பட்டலந்த முகாம் தொடர்பில் தற்போது வெளிவரும் பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அது தொடர்பான விவாதம் ஒன்று நடைபெறயிருக்கின்றது.அதன் ஊடாகவும் பல விடயங்கள் வெளிக்கொணரப்படவுள்ளன.
இந்த சித்திரவதை வதைமுகாம்களை இலங்கையில் முதன்முதலாக ஆரம்பித்தது இதன் பிரதான சூத்திரதாரியாக ரணில்விக்ரமசிங்க இருந்திருக்கின்றார். இவர் மூலமாக பெருமளவான இளைஞர் யுவதிகள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
நீதியான விசாரணை
இது தொடர்பான நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அதன் சூத்திரதாரிகளுக்கு தண்டனைப்பெற்றுக்கொடுக்கப்படும். இந்த நாட்டினை சரியான முறையில் வழிநடாத்தி அபிவிருத்தி பாதைக்கு கொண்டுசெல்லவேண்டும்.
மக்களின் வாழ்வியலை சரியான முறைக்கு கொண்டுவரவெண்டும். பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும் விலைகள் குறைக்கப்படுகின்றன.
மாற்றங்களை தேசிய மக்கள் சக்தியானது குறுகிய காலத்தில் செய்திருக்கின்ற நிலையில் மிகுதியாகவுள்ள நான்கரை வருடத்தில் நாட்டினை நல்ல வகையில் மீட்டு எடுக்கும் பாதையில் நாங்கள் பயணித்துக்கொண்டிருக்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 3 நாட்கள் முன்

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
