இந்தியாவிற்கு ரணில் தரப்பு விடுத்துள்ள அழைப்பு
பிரதமர் நரேந்திர மோடி நாளையதினம் இலங்கைக்கு வருகை தர திட்டமிட்டுள்ள நிலையில், அண்டை நாடுகளுடன் வலுவான இருதரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய தற்போது கிடைக்கும் வாய்ப்பின் சாளரத்தை இந்தியா பயன்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க இலங்கையின் பிரதமராக பதவி வகித்தபோது, 2015 - 2017ஆம் ஆண்டுகளில் அவருக்கு ஆலோசகராக பணியாற்றிய பொருளாதார எழுத்தாளர் ரசீன் சாலி இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி
லண்டன் ஸ்கூல் ஒஃப் எகனொமிக்ஸ் மற்றும் தேசிய சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 60 வயதான இந்த கல்வியாளர், இந்திய ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் இந்தியாவின் அனுதாபத்தை கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2022ஆம் ஆண்டு இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் போது, உதவியதன் விளைவாக, இலங்கையில், இந்தியாவுக்கு சாதகமான கருத்து சூழலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதிய சீர்திருத்தங்கள்
இந்தநிலையில், இரண்டு அண்டை நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவு காரணமாக, இலங்கையில் பங்குகளைக் கொண்ட பிற சக்திகளான குறிப்பாக சீனா மற்றும் அமெரிக்கா என்பன கவலைக்கொள்ளத் தேவையில்லை.
இலங்கையின் சில பிரிவுகளிடையே தமிழ்நாடு என்பது அரசியல் தடையாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்ட சாலி, புவியியல் அடிப்படையில், இலங்கைக்கும் இந்தியாவின் தனிப்பட்ட மாநிலங்களுக்கும் இடையே நெருக்கமான தொடர்புகளுக்கு மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இலங்கை, சர்வதேச நாணய நிதிய சீர்திருத்தங்களில் மட்டுமே சார்ந்திருக்கக்கூடாது.
இது, இலங்கை மிகவும் குறைந்த அளவிலான பொருளாதார வளர்ச்சியில் நகர்ந்து, அடுத்த பொருளாதார நெருக்கடிக்கு விதைகளை விதைக்கக்கூடும் என்றும் பொருளாதார எழுத்தாளர் ரசீன் சாலி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 11 மணி நேரம் முன்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam
