அரசாங்கத் தரப்பு எல்லையின்றி பொய் கூறுகின்றது
அரசாங்கத் தரப்பு எல்லையின்றி பொய்யுரைத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முதல் கொழும்பு மாநகரசபை முதல்வர் வரையில் அனைவரும் பொய்யுரைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர முதல்வர் பல்தசாருக்கு சரியாக பொய்யுரைக்கவும் தெரியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு நகர வடிகாலமைப்பினால் 30 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழையை தாங்கிக்கொள்ள முடியாது என பல்தசார் கூறுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் 400 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே பல்தசார் கூறுவது முற்று முழுதான பொய் என்பது அம்பலமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இதுவரையில் வெள்ள ஆபத்து ஏற்பட்டதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களம் கடந்த 32 ஆண்டுகளாக கொழும்பு நகரிற்கு பெய்த மழை தொடர்பில் புள்ளிவிபரங்களை வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இருக்கும் கொழும்பு மாநகரசபையின் முதல்வர் பல்தசார் கூறுவது பொய் என்பது புலனாகியுள்ளது என எஸ்.எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.