அனைவருக்கும் சம உரிமை கிடைப்பதற்கான வழி: அநுர தரப்பு வலியுறுத்தல்
அனைவருக்கும் சமமான உரிமைகள் கிடைக்க, தேசிய மக்கள் சக்தி, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறவேண்டும் என அக்கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ஹேமந்த தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (06.10.2024) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதித்துவத்தினை அதிகரிப்பதற்கான கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
“சாதாரணமாக வரி செலுத்தும் அனைத்து மக்களும் துன்பங்களை தான் அனுபவித்து வருகின்றனர். அவர்களின் கல்வி தேவைகள், சுகாதார தேவைகள், சட்டம் அரச நிறுவனங்களில் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவைகள் உள்ளிட்டவை நிறைவேற்றப்படும் போது, அது பக்கச்சார்பாகவே நடைபெறுகின்றன.
அனைவரும் சமம்
இந்த நாட்டில் வாழும் மக்கள் என்ற ரீதியில் நாம் அனைவரும் சமமாகவே இருக்க வேண்டும். அவர்களும் மனிதர்கள் என்ற மனப்பான்மை எல்லோர் மத்தியிலும் ஏற்பட வேண்டும்.

எனவே, எமது நாட்டில் சட்டத்திட்டங்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஆனால் மக்களின் வரி பணத்தில் வாழும் ஒரு சிறிய குழுவினர் மாத்திரம் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து வாழ்கின்றனர்.
சுபீட்சமான வாழ்க்கை
கோடிக்கணக்கான பணத்தினை அவர்களின் சொந்த விருப்புகளுக்காக பயன்படுத்துகின்றனர். இந்த அரசியல் கலாசாரத்தினை மாற்ற வேண்டிய பொறுப்பும் தேவையும் அனைவரிடமும் உள்ளது.

எனவே, நுவரெலியா
மாவட்டத்தில் அதிகமான பிரதிநிதித்துவமும் நாடாளுமன்றத்தில் மூன்றில்
இரண்டு பெருபான்மையும் தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam