இந்த அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறியுள்ளது
இந்த அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல், பொது தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களின் போது நாட்டு மக்களுக்கு இந்த அரசாங்கம் சொர்க்கத்தை காண்பிப்பதாக உறுதியளித்திருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த வாக்குறுதியை யதார்த்தம் ஆக்குவதற்கு அரசாங்கத்தினால் முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு மட்டும் இந்த சொகுசு வாழ்க்கை வரையறுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் சொகுசான வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டுள்ள போதிலும் மக்கள் எதிர்பார்த்த வாழ்க்கை கிடைக்கவில்லை அவர்களுக்கு கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் மாவட்டத்தின் தலாவ பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மக்கள் எதிர்பார்த்த பாரிய அளவு அபிவிருத்தி திட்டங்கள் எதுவும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
சில பகுதிகளில் நீண்ட பாதைகள் மழைக்காலத்தில் நிர்மாணிக்கப்படுவதாகவும் மழைக்காலத்தில் நிர்மாணிக்கப்படும் பாதைகள் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு போதிய அளவு தெளிவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நீண்ட பாதைகள் அமைக்கும் போது ஆண்டுதோறும் அவற்றை புனரமைப்பதற்கு எதிர்பார்த்து செய்யக் கூடாது எனவும் நீண்ட காலம் நிலைத்திருக்கக்கூடிய வகையி அவற்றை நிர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மக்களுக்கு கண்கட்டி வித்தை காண்பிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்களை பாதுகாப்பதாக உறுதி அளித்த இந்த தேசிய மக்கள்ச சக்தி அரசாங்கம் அரச ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப தொடங்கியுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
