உலக போர்சூழ்நிலைகளின் சுமையை அரசாங்கம், மக்கள் மீது திணிக்கவில்லை
உலக போர்ச் சூழ்நிலைகளின் சுமையை அரசாங்கம் மக்கள் மீது திணிக்கவில்லை என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பேருவளையில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
70 ஆண்டுகளுக்கும் மேலாக சீரழிக்கப்பட்ட ஒரு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது நீண்டதும் சவாலானதுமான ஒரு பயணமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், உலகில் நிலவும் போர்ச் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் நாட்டின் மக்களுக்கு அதன் சுமை தெரியாத வகையில் செயற்பட தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை காரணமாக ஹோர்முஸ் நீரிணை ஊடான கடல்சார் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் கப்பல் கட்டணங்கள், காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், அரசாங்கம் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளை உயர்த்த அனுமதிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
வேறு அரசாங்கம் இருந்திருந்தால், இந்தப் போரைச் சாட்டாக வைத்து பெரிய சூதாட்டம் நடத்தி, எரிபொருள் இல்லை, எரிவாயு இல்லை எனக் கூறி விலைகளை உயர்த்தியிருப்பார்கள். மக்கள் மீண்டும் வரிசைகளில் நின்றிருப்பார்கள்.
ஆனால், நமது அரசாங்கத்தின் கீழ் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட அனுமதிக்கப்படவில்லை. மாறாக, எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளை படிப்படியாகக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் போன்ற சவால்களின் போதும் அரசாங்கம் மிகவும் திறம்பட தலையிட்டு மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகில் நிலவும் போரின் தாக்கம் கூட மக்களுக்குத் தெரியாத வகையில் நாட்டை ஆட்சி செய்ய முடிந்தது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய சாதனை என ரில்வின் சில்வா மேலும் வலியுறுத்தியுள்ளார்.
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri