ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல்
ஆளும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண சூரியப்பெரும பதவி விலகியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டிருந்த கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக நாடாளுமன்ற செயலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
ஜூன் 20ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அவர் ராஜினாமா செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி
தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றிற்கு தெரிவாகிய ஹர்ஷண சூரியப்பெரும, நிதி மற்றும் திட்டமிடல் ஒழுங்கமைப்புத் துறையின் துணை அமைச்சராக கடமையாற்றியுள்ளார்.

இந்த பதவி விலகல் நாடாளுமன்ற செயலாளர் குஷாணி ரோஹணதீரவால் ஏற்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவரது இடத்திற்கு வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஹர்ஷண சூரியப்பெரும இலங்கை நிதியமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போதைய நிதிச் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, இம்மாத இறுதியில் பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam