20 ஆண்டுகால அணுசக்தி தடையை நிராகரித்த ஈரான்
ஈரானின் அணுசக்தி செறிவூட்டலை 20 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதற்கான அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானின் முன்மொழிவை ஈரான் நிராகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கால அவகாசத்திற்குப் பதிலாக ஈரான் தனது சொந்தப் பதில் திட்டத்தை (Counteroffer) முன்வைத்துள்ள நிலையில், ஏற்கனவே மேசையில் இருந்த 20 ஆண்டுகாலத் திட்டம் தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துக்கள்
இதற்கிடையில், இன்று லெபனானில் எட்டப்பட்ட போர் நிறுத்தம் இந்த பேச்சுவார்த்தையில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக அமைய வேண்டுமானால், முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்பதே தற்போதைய முக்கிய கோரிக்கையாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri