கிளிநொச்சி மகளிருக்கான சிறப்பு சிகிச்சை நிலையத்தினை பார்வையிட்ட என்பிபி எம்பிக்கள்
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இடம்பெற்றதன் பின்னராக யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய வைத்திய ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் ஜெ. றஜீவன் ஆகியோர் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த விஜயமானது, நேற்றையதினம் (26) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆளணி வெற்றிடங்கள்
இதன்போது, கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் நெதர்லாந்து நாட்டின் கொடை மற்றும் மென் கடன் மூலம் ரூபா 5000 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மகளிருக்கான சிறப்பு சிகிச்சை நிலையத்தினை பார்வையிட்டு அதனை முழுமையாக இயங்கச்செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் முக்கியமாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், வைத்தியசாலையின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக்கத் தேவையான ஆளணி
வெற்றிடங்களை நிரப்புவது மற்றும் ஆளணி எண்ணிக்கையினை அதிகரிப்பது தொடர்பிலும்
கலந்துரையாடப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதன் மற்றும் கிளிநொச்சி பொது வைத்தியசாலை பணிப்பாளர், பிரதிப்பணிப்பாளர் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








நம் முன்னேற்றத்தை தடுக்க விரும்புகிறார்கள்; அதற்கு தடைவிதிக்கப்போவதில்லை - ட்ரம்ப் திட்டவட்டம் News Lankasri
இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி - நிபுணர் குழு உறுப்பினர் வெளியிட்ட தகவல் News Lankasri