தேசிய மக்கள் சக்தி அரசியல்வாதிகளின் சொத்துக்கள் ஒருவருடத்திற்குள் அதிகரித்துள்ளது! நாமல் ராஜபக்ச
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களின் சொத்துக்கள் ஒருவருடத்திற்குள்ளாக கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடும்போதே பொதுஜன பெரமுண கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகளின் சொத்துக்கள்
தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர், இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து ஒருவருடம் கடந்துவிட்டது.
ஆனாலும் இவர்கள் வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை; அதேநேரம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களின் சொத்துக்கள் ஒருவருடத்திற்குள்ளாக கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.
சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் குறுகிய காலத்திற்குள்ளாக கோடீஸ்வரர்களாக மாறியுள்ளார்கள்.
எங்களை விமர்சித்தவர்கள் இப்போது எங்களை விட செல்வந்தர்களாக மாறிவிட்டார்கள்.
இந்த சொத்துக்களை 76 வருட சாபத்தில் உழைத்தார்களா? அல்லது மறுமலர்ச்சி அரசாங்கத்தின் ஒருவருட காலத்திற்குள் உழைத்துக் கொண்டிருக்கின்றார்களா என்பதை இவர்கள் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ச தொடர்நதும் குறிப்பிட்டுள்ளார்.



