யாழில் வைத்திய முகாமை ஆரம்பித்து வைத்த தேசிய மக்கள் சக்தி எம்.பி
சீரற்ற காலநிலையின் காரணமாக யாழ். இந்து மகளிர் ஆரம்ப பாடசாலையில் இடைத்தங்கல் முகாமில் தங்கி உள்ள மக்களை யாழ். மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா பார்வையிட்டதோடு அங்கு வைத்திய முகாமையும் ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதற்கமைய, யாழ். மாவட்டத்தில் காணப்படும் 68 இடைத்தங்கல் முகாம்களிலும் இடைத்தங்கல் முகாங்களை அகற்றும் வரை வைத்திய சேவைகள் யாழ். போதனா வைத்தியசாலையால் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன்போது, யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன், யாழ். போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி மற்றும் யா.ழ் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
53 குடும்பங்கள்
மேலும், இடைத்தங்கல் முகாமில் தங்கி உள்ள மக்கள், தங்களின் நிலைமை தொடர்பாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கந்தர்மடம் வடக்கு கிழக்கு கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த 53 குடும்பங்களைச் சேர்ந்த 141 பேர் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri