அர்ச்சுனாவின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தடுமாறிய ஆளுங்கட்சி அமைச்சர்!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் கேள்விகளுக்கு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி பதிலளிக்க காலம் கோரியுள்ளார்.
நேற்றைய தினம் (22.05.2025) நாடாளுமன்றத்தில் இராமநாதன் அர்ச்சுனா உரையாற்றும் போது உப்பு உற்பத்தி தொடர்பில் சில கேள்விகளை எழுப்பினார்.
"ஆனையிறவு உப்பளம் பாரம்பரியமாக உற்பத்தி செய்து வந்த உப்பு ரஜ உப்பு என பெயர் மாற்றம் செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன? இது தமிழர்கள் மீதான திட்டமிட்ட அடக்குமுறை ஒன்றின் வடிவமா?
ஆனையிறவு உப்பளத்தில் கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட உப்பின் அளவை விட இன்றைய தினம் உற்பத்தி செய்யப்படும் உப்பின் அளவு மிக குறைவு என்பது உண்மை. இதை தாங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா?" உள்ளிட்ட மேலும் பல் கேள்விகளை அவர் எழுப்பியிருந்தார்.
இதன்போது, அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி குறித்த வினாக்கள் நேற்று முன்தினமே தனக்கு கிடைக்க பெற்றதாகவும் அவற்றுக்கான பதிலை வழங்க தமக்கு காலம் தேவை எனவும் குறிப்பிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam