தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருக்கு சிலை.. சந்திரசேகர் மறுப்பு!
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் தான் ஒருபோதும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நாட்டில் நல்லுறவை கட்டியெழுப்புவதற்கு நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுப்பதற்கு எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் பொய் பிரசாரம் இது எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை குறிப்பிட்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஹர்ஷண ராஜகருணா
மேலும் தான் சபையில் இல்லாத சந்தர்ப்பத்தில் ஹர்ஷண ராஜகருணா எம்.பி தவறான கூற்றொன்றை கூறியதாக தெரிவித்துள்ளார் எனவும் சந்திரசேகர் விளக்கியுள்ளார்.
வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பாக தான் சபையில் தெரிவித்ததாகவும் அர்ச்சுனா எம்.பி அதனை அவருக்குக் கூறியதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.
எனினும் எந்த சந்தர்ப்பத்திலும் நான் அவ்வாறு எதனையும் கூறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
