குஜராத்தின் முதல்வருடன் தேசிய மக்கள் சக்தியின் உயர்மட்டக் குழுவினர் விசேட சந்திப்பு
தேசிய மக்கள் சக்தியின் தலைவர், அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இந்தியா- குஜராத்தின் முதல்வர் பூபேந்திர படேலுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சந்திப்பானது நேற்று ( 07.02.2024) இடம்பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர், அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இந்த குழுவானது ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இந்தியா சென்றுள்ளது.
இந்தியாவின் சாதகப் பதில்
இதற்கமைய, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவு செயலாளர் வினய் மோகன் ஆகியோருடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது.
மேலும், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக தேசிய மக்கள் சக்தி, இந்த சுற்றுப்பயணத்தை கோரி இருந்த நிலையிலேயே இந்தியா அதற்கு சாதகமாக பதிலளித்துள்ளது.
அதேவேளை, இந்தியாவின் இந்த சாதக பதில், ஐக்கிய மக்கள் சக்தியின் தரப்பை கவலையடைய செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இந்தியாவிடம் இதே போன்ற வாய்ப்புக்களை மேலும் நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |