தமிழர் பகுதியில் பொதுமகனின் காதை வெட்டிய ஆளும் தரப்பு உறுப்பினர்!
திருகோணமலை மாநகர சபையை சேர்ந்த ஆளும் தரப்பு உறுப்பினர் ஒருவர் அப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் காதை கத்தியால் வெட்டிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாநகர சபை உறுப்பினருக்கும் குறித்த நபருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையடுத்தே இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதன்போது காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடிகாலை சுத்தம் செய்யும் பணி
மேலும், அவரது நிலை தற்போது கவலைக்கிடமாக இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியான மழை பெய்து வருவதால் உப்புவேலி வடிகால் அமைப்பு அடைக்கப்பட்டு மக்கள் சிரமத்தை எதிர்நோக்கி வந்தனர்.
இதனையடுத்து, சில ஊழியர்களுடன் சேர்ந்து வடிகாலை சுத்தம் செய்யும் பணியை செய்வதற்காக மாநகர சபையை சேர்ந்த ஆளும் தரப்பு உறுப்பினர் சென்றிருந்தார்.
முன்பகை
இதன்போது, அங்கு வந்த பிரதேசவாசி ஒருவர் குழப்பம் விளைவித்ததோடு உறுப்பினரை தடி ஒன்றால் தாக்க முயன்றுள்ளார்.
இந்நிலையில், தனது சொந்த பாதுகாப்பிற்காக பிரதேசவாசியை புதர்களை வெட்ட கொண்டு வந்த கத்தியை பயன்படுத்தி உறுப்பினர் தாக்கியுள்ளார்.
இருவருக்கும் இடையில் ஏற்கனவே இருந்த முன்பகை காரணமாக இந்த மோதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்க, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 22 மணி நேரம் முன்

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
