அரசாங்கத்திற்கு எதிராக பாரிய சூழ்ச்சி திட்டம்!
அரசாங்கத்திற்கு எதிராக பாரிய சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வலதுசாரி கட்சிகள் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும் இந்த சூழ்ச்சித் திட்டம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெற்றியளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழு செயற்பாடுகளை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
தங்களது இருப்பிற்காக எதிர்க்கட்சிகள் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களை மக்கள் முழுமையாக நிராகரிப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வலதுசாரி கட்சிகள் இணைந்து அரசாங்கத்தினை கவிழ்க்க மேற்கொண்டு வரும் சதித் திட்டங்கள் வெற்றியளிக்காது என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் மீது நாட்டு மக்களுக்கு நன்மதிப்பு உண்டு என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளுக்கு மக்களின் எந்தவொரு ஆதரவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீது மீண்டும் தாக்குதலா? ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri