அரசாங்கம் முதல் 100 நாட்களில் தோல்வியடைந்துள்ளது! கயந்த கருணாதிலக்க
அரசாங்கம் முதல் நூறு நாட்களில் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு 100 நாட்கள் கடந்து விட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உறுதிமொழி
எனினும், முதல் 100 நாட்களை பூர்த்தி செய்த அரசாங்கங்களில் மிகவும் தோல்வியடைந்த அரசாங்கமாக இந்த அரசாங்கம் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் மேடைகளில் 24 மணித்தியாலங்களில், ஒரு கையொப்பத்தில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக உறுதிமொழி வழங்கிய அரசாங்கம் அதனை செய்யத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையை குறைப்பதாக விளக்கமாக பேசிய அரசாங்கம் இன்று மௌனித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்ட அரசாங்கத்தினால் செய்ய முடியாத காரியங்களை நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய எந்தவொரு உறுதிமொழியும் நிறைவேற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.