தேசிய மக்கள் சக்தியின் பிரஜா சக்தி திட்டம்.. அன்னராசா முன்வைக்கும் குற்றச்சாட்டு
யாழ். தீவகப் பகுதி ஒன்றில் தேசிய மக்கள் சக்தியின் பிரஜா சக்தி திட்டத்தின் பிரதேச தலைவராக இருக்கின்ற ஒருவருக்கு கடல் அட்டை குஞ்சு பொரிக்கும் நிலையம் ஒன்றை வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் சமாசத்தின் முன்னாள் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா குற்றம் சாட்டினார்.
நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும், "கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் எமது வளமான கடலை சீனர்கள் உண்ணும் கடல் அட்டை பண்ணை அமைத்து அழித்துவருகிறார்.
எமது மக்களின் உணவுச சக்கரத்தில் இல்லாத உணவான கடல் அட்டையை வளர்ப்பதற்காக எமது கடற் பபகுதிகளின் முழு வீச்சில் அட்டை பண்ணை அமைத்து வருகிறார். எமது மக்கள் ஒரு காலத்தில் மீனை உணவாக உண்ண முடியாத அளவுக்கு கடலை இயற்கைக்கு முரணாக மீன் இனங்கள் பெருகாத வகையில் கடல் அட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அதன் ஒரு தொடர்ச்சியாக அட்டைக் குஞ்சுகளை வளர்க்கும் திட்டம் ஒன்றை தீவகத்திலேயே செயல்படுத்துவதற்காக பிரஜா சக்தியின் தலைவருக்கு இடத்தை ஒதுக்குமாறு அமைச்சரின் சகா அதிகாரிகளுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார்.

தீவகத்தில் ஏற்கனவே கடல் அட்டைக குஞ்சு பொரிக்கும் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு தோல்வியடைந்த நிலையில் தோல்வி அடைந்த திட்டம் ஒன்றை மீண்டும் செய்ய துடிப்பது ஏன்.
அதிகாரிகளுக்கு குடைச்சல் கொடுக்கும் அமைச்சரின் சகாவின் பெயரை என்னால் கூற முடியும் அதற்கான ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது. ஆனால் பிழையான ஒரு திட்டத்தை செய்கிறார்கள் என்பதை கூறியிருக்கிறேன் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்தி குறித்த திட்டத்தை வேண்டும் இல்லாவிட்டால் அவரின் பெயரை மக்களுக்கு தெரிவிப்பேன்.
இம்மாத இறுதிப் பகுதியில் தெற்கு அமைப்புக்குளுடன் ஒன்று சேர்ந்து வடக்கு இடம்பெறும் சட்டவிரோத கடல் அட்டை பண்ணைகளுக்கு எதிராக கவனயீர்ப்பு செயற்பாடுகளை மேற்கொள்ள உள்ளோம்.
ஆகவே எமது வளமான இயற்கையான கடலை அழிக்கும் வகையில் கடத் தொழில் அமைச்சர் செயற்பாட்டுபரும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லாவிட்டால் மீனவ மக்களை ஒன்று திரட்டி பாரிய ஒரு போராட்டத்தை மேற்கொள்வோம்" என அவர் மேலும் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri