கோட்டாபய அரசாங்கத்தை விட இந்த அரசாங்கம் பொய்யுரைக்கின்றது
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தை விடவும் இந்த அரசாங்கம் பொய்யுரைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் யட்டிநுவர அமைப்பாளர் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேர்மையான, கௌரவமானவர்கள் நாடாளுமன்றில் அங்கம் வகிக்க வேண்டுமென மக்கள் கருதினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
பொய்யுரைத்து நாட்டை ஆட்சி செய்ய முடியாது
கலாநிதி பட்டம் பெற்றவர்கள், பேராசிரியர்கள் நாடாளுமன்றில் அங்கம் வகிக்க வேண்டுமென மக்கள் கோரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்ல ஒழுக்கமான செயற் திறன் மிக்கவர்களை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டுமென மக்கள் கருதினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தங்களுடன் படித்தவர்கள் இருக்கின்றார்கள் என்பதை நிரூபணம் செய்ய முயற்சித்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் அவ்வாறு படித்தவர்கள் என்று காண்பித்துக் கொண்டவர்கள் சிலருக்கு இன்று பட்டம் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொய்யுரைத்து நாட்டை ஆட்சி செய்ய முடியாது என்பது மீண்டும் மீண்டும் நாட்டில் நிரூபணமாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூட இவ்வளவு பொய்களை கூறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோட்டாபயவிற்கு பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய முடியாத காரணத்தினால் நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கமும் மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துள்ளதாக மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.