உள்ளூராட்சி மன்ற பட்ஜெட்டுகளில் அரசுக்கு நடப்பது என்ன..!
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் உள்ள மூன்று உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டங்கள் நேற்றுமுன்தினம் (20.11.2025) தோற்கடிக்கப்பட்டுள்ளன.
மேலும் பல பிரதேச சபைகளின் வரவு செலவுத் திட்டங்கள் தொடர்ச்சியாக தோற்கடிக்கப்பட்டு வருகின்றன.
தங்காலை மாநகர சபை
தங்காலை மாநகர சபையின் தொடக்க வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 09 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் கிடைத்ததால் பட்ஜெட் ஒரு வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
தங்காலை மாநகர சபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 19. தேசிய மக்கள் சக்தி 09 , சமகி மக்கள் சக்தி 05 , இலங்கை பொதுஜன பெரமுன 03, ஐக்கிய தேசியக் கட்சி 01, சர்வ ஜன பலய 01 ஆசனத்தையும் பெற்றிருந்தன.
யட்டியந்தோட்டை பிரதேச சபை
யட்டியந்தோட்டை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான முதல் வரவு செலவுத் வாக்கெடுப்பில், ஆதரவாக பதின்மூன்று வாக்குகளும், எதிராக பதினேழு வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் தோற்கடிக்கப்பட்டது.
களுத்துறை பிரதேச சபை
களுத்துறை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தேசிய மக்கள் சக்தியின் 15 எம்.பி.க்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
அதே நேரத்தில் சபையில் உள்ள மற்ற கட்சிகளின் அனைத்து எம்.பி.க்களும் எதிராக வாக்களித்த நிலையில் தோற்கடிக்கப்பட்டது.
வெலிகம பிரதேச சபை
வெலிகம பிரதேச சபையின் முதல் வரவு செலவுத் திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஆளும் கட்சி வென்றுள்ளது. அங்கு, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 23 வாக்குகள் அளிக்கப்பட்டன.
அதே நேரத்தில் தேசிய மக்கள் சக்தி வாக்களிப்பில் இருந்து விலகி இருந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |