மகிந்தவின் உறுப்பினர்களின் ஆதரவை பெற முயற்சிக்கும் அநுர தரப்பு
ஜனாதிபதியின் தேசிய மக்கள் சக்தியினர், மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுனவின் மூலம் உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவானவர்களின் ஆதரவை பெற முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உறுப்பினர்களை இரகசியமாக அணுகி, உள்ளூராட்சி சபைகளை அமைப்பதற்கான ஆதரவை கோரி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்துள்ளார்.
ஆதரவு தர மறுத்தால், அவர்களுக்கு அச்சுறுத்தல்களும் விடுக்கப்படும் சீ.சீ.டிவி காட்சிகள் தம்மிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், சுயாதீனக் குழுக்களில் கொள்ளையர்கள் இருப்பதாகவும், பழைய திருடர்கள் சுயாதீனக் குழுக்களில் இருந்து வந்தவர்கள் என்றும், முன்னர் தேசிய மக்கள் சக்தியினர் கூறி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இப்போது அவர்கள் இரகசியமாக தங்கள் உறுப்பினர்களை அணுகுகிறார்கள். கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தாமல், பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி உறுப்பினர்களின் வீடுகளுக்குச் செல்கிறார்கள் என்றும் டி .வி சானக தெரிவித்துள்ளார்.
அந்த நாட்களில் திருடர்களாக தெரிந்தவர்கள், என்று, உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் சிக்கலில் இருக்கும்போது, தேசிய மக்கள் சக்திக்கு, நல்லவர்களாக தெரிவதாகவும் சானக சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மரக்கிளைகளில் சிக்கிய சடலங்கள்... கரைகளில் அழுகும் மீன்கள்: டெக்சாஸ் பேரிடரின் கோர முகம் News Lankasri

இந்தியக் கடற்படைக்கு 17 போர் கப்பல்கள், 9 நீர்மூழ்கிக் கப்பல்கள்: ரூ.2.4 லட்சம் கோடியில் புதிய திட்டங்கள் News Lankasri
