அரசாங்கம் அமெரிக்காவின் அடிமையாக செயல்படுகிறது
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமெரிக்காவின் அடிமையாக செயல்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பெரிதாக பேசிய இடதுசாரி கொள்கைகளும் புரட்சிகளும் தற்போது அடகு வைக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டி உள்ளார். அரசாங்கம் டிரம்பின் அடிமைகளாக மாறியுள்ளது ஆகவே எமக்கு தென்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
வெளிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் மனிதாபிமானம் பற்றியும் கருணை பற்றியும் பெரிதாக பேசியிருந்தார் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

குறிப்பாக கடந்த மார்ச் மாதம் ஈரனிய போர் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய போது கப்பலின் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் மீட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.
எனினும் இந்த கூற்றுகளுக்கு முற்றிலும் தலைகீழான விடயங்களை இந்த அரசாங்கம் செய்து வருகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எங்களுக்கு விசாலமான இதயம் உண்டு, மனிதாபிமான மீட்பு பணிகளில் ஈடுபட்டோம் இத்தனை உயிர்களை மீட்டோம் என அரசாங்கம் கூறிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
தற்பொழுது அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திற்கு தடைகளை விதிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது இதனை ஏற்றுக்கொண்ட அரசாங்கம் ஈரானிய கப்பல்களுக்கு உணவு வழங்குவதற்கு தடை விதித்துள்ளது என ரவுப் ஹக்கீம் குற்றம் சுமத்தியுள்ளார்.