ஜனாதிபதி நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்து பொய்யானது! ஹரினி குற்றச்சாட்டு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்து பொய்யானது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டை யாரும் பொறுப்பேற்காத காரணத்தினால் தீயில் பாய்ந்து நாட்டை காப்பாற்றியதாக ரணில் கூறுவது முற்றிலும் பொய்யானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாற்று வழி
இவ்வாறான கூற்றுக்களின் மூலம் நாட்டில் ரணிலைத் தவிர்ந்த வேறு மாற்று வழியில்லை என்ற ஓர் நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் உருவாக்க முயற்சிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு காணப்படும் ஒரே மாற்று வழி ரணில் தலைமையிலான அரசாங்கம் அல்ல.
மாற்று வழியை தெரிவு செய்வதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
மாற்று வழியில்லை எனக் கூறி அரசாங்கம் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.