மாகாண அபிவிருத்திக்கு இளைஞர்களே தேவை: வடக்கு ஆளுநர்
வட மாகாணத்தின் அபிவிருத்திக்கு நிதி பிரச்சினை இல்லை. அபிவிருத்தியை முன்கொண்டு செய்வதற்கான இளைஞர்களே தேவைப்படுகிறார்கள் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இரணை இலுப்பைக்குளம் பாடசாலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை தரமுயர்த்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வட மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்த அரசாங்கம் விசேட நிதியை ஒதுக்கி இருக்கின்றது. அது உள்ளூர் வீதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
அபிவிருத்தி
வவுனியா மாவட்டத்தை தவிர ஏனைய நான்கு மாவட்டங்களில் நான் அரசாங்க அதிபராக இருந்ததன் காரணமாக எனக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் மூளை முடுக்குகள் அனைத்தும் நன்கு தெரியும். எனது அலுவலகங்களுக்கு தெரியாத பல விடயங்களை நான் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.
குறிப்பாக இந்த இடத்திலே இன்ன விடயம் இருக்கிறது என்பதை கூட இடரீதியாக அவர்களுக்கு சொல்லி இருக்கிறேன். அந்த அளவிற்கு எனக்கு இந்த பிரதேசங்கள் மிகவும் தெரிந்தவை.
எங்களைப் பொறுத்த வரைக்கும் மிகவும் வறுமையில் உள்ள மக்களினுடைய வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்பதாகவே இருக்கின்றது. அதனை அடைவதற்கு நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
இளைஞர்களே அபிவிருத்தி செய்வதற்காக தேவைப்படுகிறார்கள். நிதி எங்களுக்கு பிரிச்சனை இல்லை. ஆனால் எவ்வாறு செயல்படுத்த போகின்றோம் என்பது தான் இங்கு இருக்கின்ற பிரச்சினை. இதுவரை எங்களுக்கு பல பிரச்சினைகள் இருந்தது.
மக்களுடைய தேவைகள்
குறிப்பாக மக்களுடைய தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. மக்கள் அலுவலகங்களுக்கு சென்றால் அங்கு தங்களுடைய செயற்பாடுகளை செய்ய முடியவில்லை என்கின்ற பிரச்சனைகள் இருந்தது.
மக்களுடைய தேவைகளை கூட அறிய முடியாமல் இருந்தது. அவை மாற்றப்படுகின்றன.
நாங்கள் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களையே முன்னேற்ற வேண்டும். அரசாங்கம் கூட கிராமபுற வீதிகளை புனரமைக்க வேண்டும் என கூறுகின்றது எனத் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri

மாஸ் வரவேற்பு பெற்றுள்ள டிராகன் படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
