மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சக செயலாளருக்கு விடுக்கப்பட்ட உத்தரவு
தனது செயல்களை நீதிமன்ற அவமதிப்பாக ஏன் கருதக்கூடாது என்பது குறித்து விளக்கமளிக்க, நவம்பர் 19ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி (Power and Energy) அமைச்சகத்தின் செயலாளருக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது
முன்னணி பொறியியல் நிறுவனமான எல்.டி.எல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் சம்பந்தப்பட்ட வணிக பரிவர்த்தனைகளின் சட்டபூர்வமான தன்மையை சவால் செய்யும் மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணையின் போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்;டுள்ளது.
உயர்நீதிமன்றம் அறிவித்தல்
உயர்நீதிமன்றில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே 30.10.2024 திகதியன்று கடிதம் ஒன்றை அமைச்சின் செயலாளர் அனுப்பியதாகவும், அதில் நிறுவனத்தின் கணக்காய்வை நடத்துமாறு அறிவுறுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றம் இந்தச் செயலை சாத்தியமான சட்ட மீறல் என்றும் அதனால் நீதிமன்றம் அவமதிக்கப்பட்டுள்ளதாக கருதியுள்ளதாகவும் நீதியரசர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்தே தனது நடத்தையை நீதிமன்ற அவமதிப்பாக ஏன் கருதக்கூடாது என்பது குறித்து விளக்கமளிக்க, நவம்பர் 19ம் திகதி முற்பகல் 9:30 மணிக்கு செயலாளர் நேரில் முன்னிலையாக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |