பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான உறுதிசெய்யப்பட்டுள்ள அறிவித்தல்

Sri Lanka Upcountry People Manusha Nanayakkara
By Sivaa Mayuri May 27, 2024 10:05 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in சமூகம்
Report
Courtesy: Ministry of Labour & foreign Emp

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்த பட்ச சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்கான தீர்மானத்தை அனைத்து தோட்ட முதலாளிமார்களும் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய தேயிலைத் தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அறிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். 

ஈரான் ஜனாதிபதி மரணத்தில் வெளிவரா திகில் நிமிடங்கள்

ஈரான் ஜனாதிபதி மரணத்தில் வெளிவரா திகில் நிமிடங்கள்

தோட்ட உரிமையாளர்கள்

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, குறைந்தபட்ச சம்பளத்தை வழங்காத தோட்டங்கள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டு முறையானவர்களிடம் கையளிக்கப்படும்.

சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் ஏற்கனவே குறைந்தபட்ச சம்பளத்தை விட அதிகமாக சம்பளத்தை செலுத்தி வருவதாகவும், அரசாங்கத்திடம் இருந்து தனியாருக்கு மாற்றப்பட்ட உள்ளூர் தோட்ட நிறுவனங்களில் இந்த சம்பளத்தை அதிகரிப்பதில் சிக்கல் இருக்கிறது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான உறுதிசெய்யப்பட்டுள்ள அறிவித்தல் | Notification Regarding Salary Of Estate Labourers

குறைந்தபட்ச சம்பளத்தை நடைமுறைப்படுத்தாத தோட்ட நிறுவனங்களை கையகப்படுத்தி அவற்றை உரிய முறையில் நடைமுறைப்படுத்தக் கூடியவர்களுக்கு வழங்குவதற்கான அடிப்படை சட்டத்தை தயார் செய்ய ஜனாதிபதி அமைச்சரவையில் தீர்மானம் எடுத்துள்ளது.

பெருந்தோட்ட முதலாளிகளுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். தொழிற்சங்கங்களுடன் பல சந்திப்புகளை நடத்தினோம். ஆனால் இறுதியில் இரு தரப்பினரும் ஒரு பொது உடன்படிக்கைக்கு வரவில்லை .

எனவே தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு என்ற வகையில் அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக சம்பள நிர்ணய சபையை கூட்டினோம்.

மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

அடிப்படை சம்பளம்

எனவே, உடன்பாடு இல்லாதபோது எடுக்கக்கூடிய ஒரு செயலாக தொழில் ஆணையாளரின் அதிகாரப் பிரதிநிதிகள் மூலம் இறுதியாக சம்பள நிர்வாக சட்ட விதிகளின்படி ETF EPF உடன் அடிப்படை சம்பளம்1350 ரூபாய் மற்றும் மேலதிகக் கொடுப்பனவு 350 ரூபாய் என சம்பளம் 1700 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் முன்மொழிந்துள்ளோம்.

அதனை மே 01 ஆம் திகதி அன்று வர்த்தமானியில் வெளியிட்டோம். அதற்கு எதிராக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆட்சேபனை தெரிவிக்க 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான உறுதிசெய்யப்பட்டுள்ள அறிவித்தல் | Notification Regarding Salary Of Estate Labourers

எனினும் இதற்கான முறையான ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிலான முன்மொழிவுகள் மற்றும் திட்டம் எதுவும் முன்வைக்கப்படாததால் கடந்த வியாழன் அன்று நாளாந்த குறைந்த பட்ச சம்பளம் 1350 ரூபாய் மேலதிக கொடுப்பனவு 350 ரூபாய் என வர்த்தமானி அறிவிப்பை தொழில் திணைக்களம், அரசாங்கம் மற்றும் தொழில் அமைச்சர் என்ற வகையில் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தி வெளியிட்டோம்.

அரசு தோட்டங்களை தனியாருக்கு குத்தகைக்கு விடும்போது, குத்தகைக்கு பெற்றவர்கள் இத்தோட்டங்களில் உள்ள மரங்களை வெட்டி வேறு தொழில் செய்கின்றனர்.

கனடாவுக்கு பயணமாகவிருந்த இளைஞன் விபத்தில் பலி

கனடாவுக்கு பயணமாகவிருந்த இளைஞன் விபத்தில் பலி

பெருத்தோட்ட முதலாளிமார்கள்

இந்த தேயிலை மற்றும் இறப்பர் மூலம் எமது தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் கிடைப்பதில்லை என இன்று பலவாறு தெரிவிக்கப்படுகின்றன . அதனால்தான் இந்த சம்பள அதிகரிப்பு முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும் பயனுள்ள வகையில் அதை செலுத்த வாய்ப்பு உள்ளது. எதிர்காலத்தில், உற்பத்தியை முழுமையாக அதிகரிக்க வேண்டும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான உறுதிசெய்யப்பட்டுள்ள அறிவித்தல் | Notification Regarding Salary Of Estate Labourers

அதற்கு அரசு என்ற வகையில் நாங்களும் துணை நிற்கிறோம். தமது திறமையின்மையினால் தொழிலாளிகளுக்கு சம்பளம் வழங்காமல் மறைத்து இலாபத்தைமுறையாக காட்டாது செயற்படும் பெருத்தோட்ட முதலாளிமார்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சிலர் அரசு தோட்டங்களை கையகப்படுத்தி, நிர்வாகத்தை கையகப்படுத்தி, அவற்றை முறையாக நிர்வகிக்காமல், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் உள்ளனர். இது தொடர்பில் விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி கடந்த வாரம் அமைச்சரவையில் புதிய தீர்மானத்தை எடுத்தார்.

பொருளாதார நெருக்கடி

அதிகரித்த சம்பளத்தை வழங்க முடியாத தோட்டங்களை மீளப் பெற்று திறமையானவர்களுக்கு வழங்குவதற்கான அடிப்படை சட்டமூலத்தை உருவாக்குவதற்கு கடந்த வாரம் அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டது.

தோட்டங்களை நிர்வகிப்பது சிரமமாக இருந்தால், இலாபம் இல்லை என்றால், தோட்டங்களை முறையாக செய்யக்கூடியவர்களிடம் ஒப்படைப்பதற்காக அரசிடம் ஒப்படையுங்கள்.

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத, தோட்டத் தொழிலாளர்களை கவனிக்காத தோட்டங்கள் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டு, அவற்றை முறையாகப் பராமரிக்கக் கூடியவர்களுக்கு வழங்க அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்படும்.

இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தமக்கு ஆதரவளிக்குமாறு சகலரையும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார். எனவே அவருக்கு ஆதரவை வழங்க வேண்டும். ஏனெனில் நாடு மிகவும் மோசமாக பொருளாதார நெருக்கடியில் வீழ்ந்து தற்போது மீண்டும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

இப்போது நாடு முன்னேற வேண்டும். நிறம், கட்சி, இனம், சாதி, மதம் என்ற பேதமின்றி அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதிவேக இணைய பாவனைக்கு காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

அதிவேக இணைய பாவனைக்கு காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
மரண அறிவித்தல்
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Chennai, India

07 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, Markham, Canada

06 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Stouffville, Canada

05 Dec, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US