பொது மன்னிப்பு தொடர்பில் விசேட அறிவிப்பு
ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை 76 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறையில் உள்ள 600 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
இதேவேளை அரசியலமைப்பின் 34 வது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, குறித்த பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.
அபராதத்தொகை
ஒழுக்கத்துடன் நடந்துகொண்ட மற்றும் அபராதத் தொகையை செலுத்த முடியாத கைதிகளுக்கே ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்தார்.
இதனிடையே, நாளை (04) நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவையொட்டி உறவினர்களை பார்வையிட சிறைக்கைதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கைதி ஒருவரை பார்ப்பதற்கு குடும்பத்தில் மூவருக்கு மாத்திரம் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
