உணவிற்காக பெருந்தொகை பணத்தை செலவிட்ட இராணுவ தளபதிகள்! பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்
2022 ஆம் ஆண்டில் பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரிக்கு வந்த இராணுவத் தளபதிகள் குழு, உணவிற்காக பெருமளவிலான பணம் செலவிடப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறியில் 25 வெளிநாட்டு இராணுவ வீரர்கள் மற்றும் 123 உள்ளூர் இராணுவ வீரர்கள் உட்பட 148 இராணுவ வீரர்கள் பங்கேற்றதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் தேநீர் விருந்து வைப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட இராணுவ மரபு எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு,
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri