உணவிற்காக ஐந்து நாட்களில் 11 இலட்சம் ரூபாய் பணத்தை செலவிட்ட இராணுவ தளபதிகள்
2022 ஆம் ஆண்டில் பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரிக்கு வந்த இராணுவத் தளபதிகள் குழு, உணவிற்காக, ஐந்து நாட்களுக்கு பதினொரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
பொருளாதார நெருக்கடி காரணமாக செலவினங்களை கட்டுப்படுத்துவதற்காக திறைசேரி விடுத்துள்ள சுற்றறிக்கைக்கு முரணாக இந்த தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையின் படி, மேற்படி பணியாளர் கல்லூரியின் விவகாரங்களை ஆய்வு செய்ய வந்த பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு அதிகாரி மற்றும் முப்படை தளபதிகளுக்கே இவ்வாறு செலவிடப்பட்டுள்ளது.
விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 1 மணி நேரம் முன்
குணசேகரனுக்கு சமமாக உட்கார்ந்து ஜனனி காட்டிய மாஸ், கதிரை வெளுத்த சக்தி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
உக்ரைனில் கால் பதிக்கும் ஐரோப்பிய நாடுகளின் படைகள்! ரஷ்யா தொடர்பில் டிரம்ப் வழங்கிய உறுதி News Lankasri