உள்ளூராட்சி மன்ற தேர்தல்: அஞ்சல் மூல வாக்களிப்பிற்கான திகதிகள் அறிவிப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பிற்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22, 23, 24 ஆம் திகதிகளில் அஞ்சல் மூல வாக்களிப்புக்கள் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அஞ்சல் மூல வாக்களிப்பு
அத்தோடு, குறித்த திகதிகளில் வாக்களிக்க முடியாதவர்கள் ஏப்ரல் மாதம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று மதியம் 12:00 மணியுடன் நிறைவடைந்துள்ளன.
இதனையடுத்து, குறித்த பிரதேச சபைகளுக்கான தேர்தல் மே மாதம் ஆறாம் திகதி நடத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 59 நிமிடங்கள் முன்

சூப்பர் சிங்கர் அனுராதா ஸ்ரீராமின் கணவரை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam

F-1 Visa ரத்து... நூற்றுக்கணக்கான மாணவர்களை நாட்டைவிட்டு வெளியேற ஆணையிட்ட ட்ரம்ப் நிர்வாகம் News Lankasri
