இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு
2023ஆண்டு பெப்ரவரி மாதத்தை விட இவ்வாண்டு பெப்ரவரி மாதத்தில் அதிகளவான பணம் வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களால் பணம் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மேலும்,
கடந்த பெப்ரவரி மாதத்தில் வெளிநாடுகளிலுள்ள இலங்கை பணியாளர்களால் 476.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பதிவாகியுள்ள அதிகரிப்பு
இது கடந்த 2023 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 16.88 சதவீத அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், குறித்த மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் மூலம் இலங்கை 345.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது.
இந்த தொகை கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்துடன், ஒப்பிடுகையில், 113.92 சதவீத அதிகரிப்பாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
