பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் திகதி அறிவிப்பு
புதிய கல்வியாண்டுக்கான மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 14ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை கோருவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த ஆண்டு, பல்கலைக்கழக சேர்க்கை கையேடு ஆணைக்குழுவின் www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திலிருந்து மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக இம்முறை அச்சிடல் நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Z மதிப்பெண்கள்
விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அதற்கு மேலும் மூன்று வார கால அவகாசம் அளிக்கப்படும், அதாவது ஜூலை 19 ஆம் திகதி வரை விண்ணப்பதாரர்கள் ஒரு முறை மட்டுமே திருத்தங்களைச் செய்ய முடியும்.
ஓகஸ்ட் கடைசி வாரம் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் விண்ணப்பங்கள் கோரப்பட்ட பின்னர் மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச Z மதிப்பெண்களை வெளியிடவும் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |