நுரைச்சோலை அனல்மின் நிலையம் தொடர்பான அறிவிப்பு
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழந்த முதலாம் மின் உற்பத்தி இயந்திரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, நேற்று(26) பிற்பகல் முதல் 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின் உற்பத்தி
கடந்த 15 ஆம் திகதி நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் திடீரென பழுதடைந்தது.
இதேவேளை, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி செய்யும் இயந்திரமும் தற்போது பராமரிப்பு பணிகள் காரணமாக செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி, நீர் தட்டுப்பாடு
இந்நிலையில், அடுத்த ஆண்டு போதிய நிலக்கரி மற்றும் நீர் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் 12 முதல் 13 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமையை தடுக்க அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க கூறியுள்ளார்.
எரிபொருள் தட்டுபாடு
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேலும் 300 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் தேசிய அமைப்பில் சேர்க்கத் தயாராக உள்ளது. ஆனால் தேவையான எரிபொருளை வழங்குவதில் சிக்கல் ஏற்படுமா என்பது சந்தேகம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஆண்டிலும் எரிசக்தி நெருக்கடி ஏற்படும் நிலை காணப்படுவதால் எரிபொருளை கொள்வனவு செய்வது பெரும் சவாலாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 2 மணி நேரம் முன்

புதிய கட்டத்திற்கு நகரும் கனடா-இந்தியா உறவுகள்: மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்ப முயற்சி News Lankasri
