இலங்கை போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு சென்றவர்களுக்கு இலங்கை போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் கொழும்பு உட்பட தமது சேவை நிலையங்களுக்கு திரும்புவதற்கு தேவையான போக்குவரத்து சேவைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலதிக சேவை
வழமையான அட்டவணைக்கு மேலதிகமாக இன்று முதல் 20 தொடருந்துகள் மேலதிகமாக சேவையில் இணைத்துக் கொள்ளப்படும் என்று தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய இன்று (15) மாத்திரம் நாடளாவிய ரீதியில் 3,000 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை காங்கேசன்துறை, காலி, பதுளை மற்றும் பெலியத்தை ஆகிய பகுதிகளுக்கு வழமைக்கு மாறாக 20 தொடருந்துகள் மேலதிக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam