வெளிநாடுகளுக்கு சென்று திரும்பாத அதிகாரிகளின் பணியிடங்கள் குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
நீண்ட விடுப்பு பெற்று தொழில் அல்லது பிற நோக்கங்களுக்காக வெளிநாடு செல்லும் பொதுத்துறை ஊழியர்கள், விடுமுறையை முடித்துவிட்டு சேவைக்கு திரும்பாத பட்சத்தில் அல்லது விடுமுறை நீடிப்பு பெறாத பட்சத்தில், அவருடைய பணி இடம் வெற்றிடமாகியுள்ளதாக கருதப்படும் என பொது நிர்வாக அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
2022இல் பொருளாதார நெருக்கடியின் போது வழங்கப்பட்ட விசேட ஏற்பாடுகளின் கீழ் விடுமுறையைப் பெற்ற சில அதிகாரிகள் மீண்டும் பணிக்கு வரவில்லை என்பது தெரியவந்தமையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தொழில்கள்
அதன்படி, விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பாத அதிகாரிகள் பணியிடங்களை விடுவிப்பது குறித்த அறிவிப்பை உடனடியாக வெளியிடுமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு வெள்ளிக்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
2,000க்கும் மேற்பட்ட பொதுத்துறை பணியாளர்கள், வெளிநாட்டு தொழில்களுக்காக அல்லது பிற நோக்கங்களுக்காக விடுமுறைகளை பெற்றுள்ளனர்.
எனினும் பெருமளவானோர், அந்த விடுமுறை நிபந்தனைகளை மீறும் போக்கு அவதானிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
