அனைத்து நிறுவன தலைவர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்
அனைத்து நிறுவனங்களின் தலைவர்களும் நிறுவனங்களில் புதிய நியமனங்கள் மற்றும் பணி இடமாற்றங்களை செய்வதற்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் பல்வேறு நிறுவனங்களில் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவுக்குத் (Election Commission) தகவல் கிடைத்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடவடிக்கையை பாதிக்கும்
நிறுவனத்தின் தலைவர் அல்லது பணிப்பாளரை நியமிப்பதற்குத் தேவை ஏற்பட்டால் அது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

மேலும், தேர்தல் நடவடிக்கையை பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் புதிய நியமனங்கள் மற்றும் பணி இடமாற்றங்கள் தேர்தல் சட்டத்துக்கு எதிரானது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam