தையிட்டி விகாரை விவகாரம் : காணி உரிமையாளர்களுக்கு விசேட அறிவிப்பு!
தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணிகள் காணப்படுபவர்கள் தமது காணி உறுதிகள் உள்ளிட்ட ஆவணங்களுடன் வருகை தந்து காணிகளை அடையாளம் காட்டுமாறு, காணி உரிமையாளர்களில் ஒருவரான சாருஜன் சுகுமாரி தெரிவித்துள்ளார்.
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கும், கடற்தொழில் அமைச்சர் , மாவட்ட செயலர் , தெல்லிப்பழை பிரதேச செயலர் , நிலஅளவை திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் மாவட்ட செயலகத்தில் நேற்று(11.04.2026) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தையிட்டி காணி விவகாரம்
மேலும் தெரிவிக்கையில்,
தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் உள்ள காணிகளை அளவீடு செய்யாமல் , காணிகளை விடுவியுங்கள் என கேட்டோம். அதற்கு அவர்கள் காணிகளை அளவீடு செய்து உறுதியில் உள்ள காணிகளின் அளவின் அடிப்படையிலையே காணிகளை உரியவர்களிடம் கையளிப்போம் என கூறினார்கள்.

தற்போது 17 பேர் மாத்திரமே காணி உறுதிகளை கொடுத்து எமது காணிகளை மீட்க தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் விகாரை அமைந்துள்ள பகுதியில் எமது 17 பேரின் காணிகளை தவிர மேலும் சிலரின் காணிகளும் உண்டு.
காணி உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு
எனவே விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் தமது காணிகள் காணப்படுமாயின் அவர்கள் தமது உறுதிகளுடன் வந்து காணிகளை அடையாளம் காட்டி , உங்கள் காணிகளை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

தற்போது காணி உறுதி பத்திரங்களை கையளித்து, காணி உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்ட 17 பேருக்கே காணிகளை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது, இந்த சந்தர்ப்பத்தை தவற விட்டால், மீண்டும் நீங்கள் உங்கள் காணிகளை பெற 10 வருடங்களுக்கு மேலாக போராட வேண்டிய நிலைமை ஏற்படும்.
எனவே தையிட்டி விகாரை பகுதிக்குள் காணி உள்ளவர்கள் தமது காணிகளை உறுதிப்படுத்த கூடிய ஆவணங்களுடன் வருகை தந்து காணிகளை அடையாளம் காட்டுமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.
மேலதிக தகவல் - கஜு
அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட விமானத்தில் பாகிஸ்தானுக்குள் திடீரென்று களமிறங்கியுள்ள மூத்த IRGC அதிகாரிகள்
நாடு முழுவதும் தீவிர வெப்பநிலை..! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்







21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri