மகிந்தவின் நிதி மோசடிகள்: டியூ குணசேகர அறிக்கைகள் ஊடாக அம்பலம்
மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது ஜனாதிபதி பதவிக்காலத்திலும் அவரே நிதியமைச்சராக இருந்தார்.அப்போது நடந்த நிதி மோசடிகள் தொடர்பில் டியூ குணசேகர சமர்ப்பித்த பல குழு அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.
மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது ஜனாதிபதி பதவிக்காலத்தில் பொது நிறுவனங்கள் பற்றிய குழுவின் கோப் தலைவராகப் பணியாற்றிய டியூ குணசேகர சமர்ப்பித்த பல குழு அறிக்கைகள் மூலம் பெருமளவிலான நிதி மோசடிகள் வெளிவந்துள்ளன.
நிதி மோசடிகள்
தேசிய சேமிப்பு வங்கி தொடர்பாக 2012 அக்டோபர் 11 ஆம் திகதி நடத்தப்பட்ட விசாரணையில் 390 மில்லியன் ரூபா நிதி மோசடி கண்டறியப்பட்டது.
அந்த வங்கியின் பணிப்பாளர் சபையின் துணைக் குழுவொன்று எடுத்த தீர்மானத்திற்கு அமைய 'த பைனான்ஸ்' நிறுவனம் திவாலாகிக் கொண்டிருந்த நிலையில் குறித்த பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

அக்காலப்பகுதியில் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சராக மகிந்த ராஜபக்ஷ பதவி வகித்தார். 2013 ஜூலை 23 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் டியூ குணசேக்கர மஹிந்தவுடன் இணைந்து அரசியல் செய்தவர்.மஹிந்தவின் அமைச்சரவையில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam