இலங்கை நிலக்கரி நிறுவன அலுவலகத்திற்கு சீல் வைப்பு
2009 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து முறையான விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நேற்று (ஏப்ரல் 11) முற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID முறைப்பாடொன்றை சமர்ப்பித்துள்ளார்.
ஆரம்பிக்கப்பட்டுள்ள விவாரணைகள்
இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு அறிக்கைகளிலும் நாடாளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களைக் கருத்திற் கொண்டு இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து ஜனாதிபதி செயலாளர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.இந் நிலையில் இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் அலுவலகத்திற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் முத்திரையிட்டுள்ளனர்.
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam