மாவனல்லை- கேகாலை பரீட்சார்த்திகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
கேகாலை மற்றும் மாவனெல்ல மாணவர்கள், தமக்கு ஒதுக்கப்பட்ட மையங்களை அடைவதில் சிரமங்களை எதிர்கொண்டால், அருகிலுள்ள பரீட்சை மையம் ஒன்றில் பரீட்சையை எழுத அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட செயலாளர் ஜகத் எம். ஹேரத் தெரிவித்துள்ளார்.
தனியார் வாகனங்கள் மூலம் மாற்று வழிகளைப் பயன்படுத்தி தேர்வு மையங்களை அடைய முடியாத மாணவர்களுக்கும், ரயில் போக்குவரத்து முறையைப் பயன்படுத்த முடியாத மாணவர்களுக்கும் மட்டுமே இந்த வாய்ப்புள்ளதாக மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு பரீட்சை மையத்திலும் குறைந்த எண்ணிக்கையிலான வினாத்தாள்கள் மட்டுமே இருப்பதால், கண்டிக்குச் செல்லக்கூடிய அனைத்து பரீட்சாத்திகளும் அவர்கள் நியமிக்கப்பட்ட தேர்வு மையங்களுக்குச் செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
தொழில்நுட்ப அறிக்கை
இந்தநிலையில், அருகிலுள்ள பாடசாலையை கடைசி முயற்சியாக, குறிப்பிடத்தக்க சிரமங்களை எதிர்கொள்ளும் பரீட்சாத்திகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடம் குறித்து தொழில்நுட்ப அறிக்கை இப்போது பெறப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் கூறினார்.
ஆபத்து
அறிக்கையின்படி, அந்தப் பகுதி மிகவும் நிலையற்றதாகவே உள்ளது. முன்னர் பாறை வீழ்ந்த பகுதியைப் போன்ற அளவிலான மற்றுமொரு பாறை இன்னும் உயரமான இடத்தில் உள்ளது என்றும், தொடர்ந்து மழை பெய்து வருவதால், அதுவும் வீதியில் விழும் அபாயம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

எனவே இந்த ஆபத்து முழுமையாகக் குறையும் வரை வீதி மீண்டும் திறக்கப்படாது என்று மாவட்டச் செயலாளர் ஜகத் எம். ஹேரத் தெரிவித்துள்ளார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam