தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் வார நிகழ்வு..
மாவீரர் நினைவேந்தல் வாரத்தையொட்டி இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் (23) மன்னார் புகையிரத வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை தலைவர் ப.குமார் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
வடக்கில் மாவீரர் துயிலும் இல்லங்கள் இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படலாம்! ஆளும் தரப்பு எம்.பி நம்பிக்கை
மாவீரர் நினைவேந்தல்
இதன் போது மாவீரர்கள் நினைவாக பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டதோடு,இலங்கை தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,கட்சியின் உறுப்பினர்கள்,ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.



ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri