வடக்கில் மாவீரர் துயிலும் இல்லங்கள் இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படலாம்! ஆளும் தரப்பு எம்.பி நம்பிக்கை

Sri Lankan Tamils Tamils Northern Province of Sri Lanka Ramalingam Chandrasekar
By Kajinthan Nov 23, 2025 12:59 PM GMT
Report

வடக்கில் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்ற சில மாவீரர் துயிலும் இல்லங்களை இம்மாத இறுதிக்குள் விடுவிப்பதற்கான சாத்திய கூறுகள் தென்படுவதாக யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டை குட்டிச் சுவராக்கிய வாங்குரோத்து அரசியல்வாதிகள் இணைந்து ஆட்சியைக் கலைக்கப்போவதாக கூக்குரல் இட்டு வருகின்றனர்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! திருகோணமலை சம்பவத்திற்கு மன்னிப்பு கோரும் சஜித்..

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! திருகோணமலை சம்பவத்திற்கு மன்னிப்பு கோரும் சஜித்..

 தமிழ் மக்கள் 

நாட்டை 70 வருட காலத்துக்கு மேலாக சீரழித்த வரலாற்றை எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாற்றி அனைத்து இன மத மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு தாய் நாட்டைக் கட்டி எழுப்பி வருகிறோம்.

கடந்த காலங்களில் குடும்பமாக நாட்டை சூறையாடியவர்கள் துரத்தப்பட்ட நிலையில் நேர்மையான ஒரு அரசியல் கலாச்சாரத்தை எமது அரசாங்கம் முன்னெடுத்து வருவதை சகித்துக் கொள்ள முடியாத கூட்டம் இனவாதத்தை தூண்ட முனைகிறது.

வடக்கில் மாவீரர் துயிலும் இல்லங்கள் இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படலாம்! ஆளும் தரப்பு எம்.பி நம்பிக்கை | Tamil Heroes Sites To Reopen Soon

எமது அரசாங்கம் தமிழ் மக்கள் யுத்தத்தில் இறந்த மாவீரர்களை நினைவு கூறுவதற்கு எந்த தடையும் ஏற்படுத்தவில்லை.

கடந்த காலங்களில் நினைவிடங்கள் உடைக்கப்பட்ட, கொடிகள் அறுத்தெறியப்பட்ட வரலாறுகளையும் மாற்றி பூரணமாக நினைவு கூரும் உரிமையை வழங்கியது எமது அரசாங்கமே. நாட்டின் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பாதுகாப்பு தரப்பிடம் இருக்கின்ற துயிலும் இல்லங்களை விடுவிப்பதற்கான அறிவுறுத்தல்களை பாதுகாப்பு அமைச்சுக்கு ஏற்கனவே வழங்கியுள்ளார்.

நீண்டநாட்களுக்கு பிறகு விஜயின் மக்கள் சந்திப்பு! அளித்த வாக்குறுதிகள்..

நீண்டநாட்களுக்கு பிறகு விஜயின் மக்கள் சந்திப்பு! அளித்த வாக்குறுதிகள்..

துயிலும் இல்லங்கள் 

அதன் அடிப்படையில் இம்மாத இறுதிக்குள் சில துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்படலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதேபோல வடக்கில் காணி விடுவிப்புகள் திட்டமிட்டபடி படிப்படியாக இடம்பெறும்.

அதில் விதமான தயக்கமும் இல்லை. அண்மையில் வன்னி நிலப்பரப்பில் இராணுவத்திடம் இருந்த ஒரு பகுதி காணி விக்கப்பட்ட நிலையில் அதனை உரியவர்களுக்கு வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிகிறேன்.

வடக்கில் மாவீரர் துயிலும் இல்லங்கள் இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படலாம்! ஆளும் தரப்பு எம்.பி நம்பிக்கை | Tamil Heroes Sites To Reopen Soon

எமது அரசாங்கம் நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சனைக்கான தீர்வினை காண்பதற்காக புதிய அரசியலமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது.

அதைப் பொறுக்க முடியாத சிலர் தெற்கிலும் வடக்கிலும் இருக்கின்ற நிலையில் அவர்கள் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நினைப்பில் இருக்கிறார்கள்.

ரணில் - ராஜபக்சர்கள்

அண்மையில் திருகோணமலையில் ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களுக்கு பின்னால் இனவாத சக்திகளின் செயற்பாடுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகிய உள்ளது.

இவர்களின் நோக்கம் மக்களை வாழவைப்பது அல்ல தமது அரசியல் இருப்புக்களை தக்கவைத்துக் கொண்டு நாட்டை சூறையாடுவதே நோக்கம். இதை நான் விளாவரையாக கூற வேண்டிய தேவையில்லை.

வடக்கில் மாவீரர் துயிலும் இல்லங்கள் இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படலாம்! ஆளும் தரப்பு எம்.பி நம்பிக்கை | Tamil Heroes Sites To Reopen Soon

கடந்த காலங்களில் நாட்டை எப்படி ரணில் ராஜபக்சர்கள் சூறையாடினார்கள் என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.

ஆகவே எமது அரசாங்கத்தை வீழ்த்துவதாக கூறிக்கொண்டு இனங்களுக்கு இடையில் முறுகல் நிலையை தோற்றுவிப்பதற்கு வங்குரோத்து அரசியல்வாதிகள் பலவிதமான செயற்பாடுகளை செய்வார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடுகன்னாவில் நடந்த பாரியமண்சரிவு - வெளியான சிசிடிவி காணொளி..

கடுகன்னாவில் நடந்த பாரியமண்சரிவு - வெளியான சிசிடிவி காணொளி..

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US