நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்
யாழ்.சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை வலிதற்றதாக்கும் விதத்திலும் அதற்கு முரணான வகையில் நடந்து கொண்டவர்களை சாவகச்சேரி - மாவட்ட நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகரசபை முன்னாள்
உறுப்பினர் ஞா.கிஷோர் மற்றும் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் திலகராணி ஆகியோரே இவ்வாறு முன்னிலையாகவுள்ளனர்.
கடந்த 12ஆம் திகதி தனியாரால் அபகரிக்கப்பட்ட தாவளை இயற்றாலை ஊரெல்லை வீதியை மீட்டுத் தருமாறு கோரி சாவகச்சேரி பிரதேச சபைக்கு முன்பாக கிராம மக்களோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நீதிமன்ற நகர்த்தல் பத்திரம்
இந்த போராட்டத்தையடுத்து சாவகச்சேரி பிரதேசபை கொடிகாமம் பொலிஸாரோடு இணைந்து பிரதேச சபையில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் தனியாரால் அபகரிக்கப்பட்டிருந்த குறித்த வீதியை அளவீடு செய்து எல்லை வேலிகளை அகற்றி பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே தனியாரால் சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரதிநிதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துள்ளனர்.
கடந்த (18.01.2021) ஆம் திகதி சாவகச்சேரி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை வலிதற்றதாக்கும் விதத்திலும் அதற்கு முரணான வகையிலும் செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆராய்வதற்காக நாளைய தினம் (22.05.2023) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 10 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri
