கப்பலிலிருந்து எண்ணெய் கசிந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவுமில்லை என அறிவிப்பு
கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால், கடலில் தீக்கிரையான எக்ஸ்-பிரஸ் பேர்ல் கொள்கலன் கப்பலின் நேற்று மாலை வரையான நிலவர படி கப்பலிலிருந்து எண்ணெய் கசிந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கப்பலின் உரிமை நிறுவனமான "எக்ஸ்பிரஸ் பீடேர்ஸ்" தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்கள் கப்பலைச் சுற்றியுள்ள பகுதியின் செயற்கைக்கோள் படத்தை வெளியிட்டிருந்தன.
இதன்படி கப்பலின் பின் பகுதி சுமார் 21 மீட்டர் ஆழத்தில் கடற்பரப்பில் உள்ளதுடன் முன் பகுதி மிதந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சர்வதேச சுற்றுச் சூழல் பிரதிநிதிகள் நேற்று சம்பவ இடத்திற்குச் சென்று எண்ணெய் கசிவு தொடர்பில் கண்காணித்துள்ளனர்.
இதற்கிடையில் ஏதேனும்
கசிவு ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளக் காத்திருப்பதாகவும் கப்பல் உரிமையாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri